Wednesday, October 26, 2011

மனமே...மனமே!


உன் வசந்த வாசலைத் திறந்து வை
உள்ளே வருபவர்கள் உன்னதமானவர்களா
காந்தம் போல் கவர்ந்திழு
கடைசி வரை மறவாதே!
புதுமையைத் தேடிப்புறப்பட்டு விட்டாயா!
புலமையைப் பற்றுக் கொண்டிருப்பதன் காரணம்தான் யாதோ
கண்டொன்று பேசுகிறாய்
கல்மேல் எழுத்தாய்க் கருத்திலொன்று கொண்டுள்ளாய்
விளக்குச் சுடரைப் பழமென்று நம்பும்
விட்டில் பூச்சி போல்
நயமாய்ப் பேசும் நயவஞ்சகர்களை நம்பி
நாண் இழந்து போகாதே!
வான்பரப்பில் வட்டமிடும் வண்ணத்திப் பூச்சி போல்
எண்ணச்சிறகுகளைப் பறக்கவிடு
தேனெடுக்கப் பூவில் அமரும் தேனீ போல்
புவியெங்கும் கரு தேடு
கவிதைக்குப் பொருள் தேடு!
மனமே! நீ ஒரு மர்மம்
மறைந்திருந்து ஆட்டிப் படைக்கும் ஓர் ஆச்சரியம்
அரிதாரம் பூசி உலகில் நடமாடும் அவதாரம்
நரிபோல் உடலுள் நடனம் புரியும் நயவஞ்சகன்
ஒன்றை நினைத்து ஒன்றைச் செய்யும் ஓர் அறணை
வருகிறேன் உன்னை அடக்கவோர் ஆயுதம் கொண்டு
வடிக்கிறேன் ஓர் வடிவமாய்
இடம் தராது இழுத்துப் பிடிக்கிறாயா
மூச்சை அடக்கி முழுமூச்சாய் முன்னேறுகிறேன்
தியானத்தில் நீ நியாயம் காண்பாய்
தியானத்தில் நீ நியாயம் காண்பாய்

உயிரின் வலி!


உயிராய் நானிருக்க...
உன் உடலழித்தாய்...
ஓரிரு நிமிட வலி தான்...!!
அனுதினமும் உள்ளத்தில்
உரித்தத்தனையும் உவகையோடு செய்து முடிக்கிறேன்...
உயர்வே இல்லையடி எனக்கு.....!
உன்னதனை அடக்கம் செய்ய....
உரிதாய்ற்று நாட்கணக்கு.....!!!!
நான் வாழ...
நீ அழிந்தாய் என் தவறு தான்....
மனையாளின் வார்த்தைக்கு
மாறாக நடந்ததால்
பழி கொண்டேன்..!
வாழ்கையும் வலிக்கிறதடி....
நீ இல்லாத...
வாழ்கையும் வலிக்கிறதடி..

முத்தம்

மயானம் போன்ற அமைதியில்
திடீரென்று ஒரு சத்தம்...
ஐயகோ!
என் கன்னத்தில் அல்லவா யுத்தம்...
ஆஹா !
அன்பே அது நீ கொடுத்த முத்தம்...

காதல் தீபாவளி ...


புத்தாடை, பட்டாசு, இனிப்புகளில்
வராத என் தீபாவளி,
"தீபாவளி வாழ்த்துகள்" எனும்
இருசொல் குறுஞ்செய்தியில்
ஓடி வருகிறது
உன்னிடமிருந்து
வெடிச்சத்தங்களை விட்டு
பூமலர்தலைக் கொண்டாட
கற்றுக்கொடுத்தவள் நீ!
தீபாவளி விடுமுறைக்கு
நீ வருவாயயென
ஆவலோடு காத்திருக்கிறோம்
நானும் தீபாவளியும்.
வெடிகளைக் கொளுத்தி
கையால் வீசிக்கொண்டிருந்தவள்,
நான் நெருங்கியதும்
பட்டாசுக்கு பயந்தவளைப் போல
என் பின்னே ஒளிகிறாய்.
உன் பயத்தை
நான் ரசிப்பேனென நினைத்து...
அட... நான் ரசிப்பது உன் நடிப்பை!
நீ
திரி கிள்ளிய சந்தோஷத்தில்
செத்தேப் போகிறது
பட்டாசு.
தீபாவளிக்கு முன்னிரவு
வீதியையும் மனதையும் நிறைத்தபடி
வாசலில் வரைந்துவைத்தாய்,
வண்ணப் பொடிகளால் ஓர் ஓவியம்.
தீபாவளிக்கு பின்காலை.
கலைந்து போன வண்ணங்களை
பாவமாய் நீ பெருக்குகையில், நீட்டுகிறேன்...
இரவோடிரவாக என் கேமராவுக்குள்
படமாகிப் போன ஓவியத்தை.
உன் முகத்தில் தீப ஒளி,
என் கண்ணில் கேமரா!
பட்டாசு சத்தங்களைக் காட்டிலும்
இனிப்புகளோடு என்னில் நுழையும்
உன் கொலுசொலி இசைத்துச் செல்கிறது
எனக்கான தீபாவளியை

உன்னைத்தவிர......


எப்போதும் அமைதியான எனது விழிகள்
உன்னைக் கண்டதும் பரபரப்பதை கண்டு
உன்மேல் எனது பிரியத்தை புரிந்து கொண்டாள் அம்மா........
யாருக்காகவும் காத்திராத என் கால்கள்
உன்னைக் காணவே கால்கடுக்க காத்திருப்பதை கண்டு
உன்மேல் நான் கொண்ட நேசத்தை தெரிந்து கொண்டார் அப்பா....
ஏக்கம் கொண்ட மனதின் துயரையும்
தூக்கமில்லா பொழுதுகளையும் கண்டதால்
உனக்கான என் அன்பினை புரிந்து கொண்டாள் அக்கா.....
காரணம் இல்லாத சிரிப்பினையும்
உளறலான பேச்சினையும், என் தவிப்புகளையும் பார்த்து
உன் மேல் நான் கொண்ட ஆசையை அறிந்து கொண்டான் அண்ணன்.......
எல்லோரும் தெரிந்து கொண்டனர்
உன் மீதான எனது காதலை
உன்னைத்தவிர..............

Beautiful Love Momentz..


Tuesday, October 25, 2011

Love With No Fear..



I wish I had my innocence back so I could love with no fear, fully and deeply…
… like I had never been hurt...